உடுமலை நகராட்சி தலைவருக்கு விருது
உடுமலை நகராட்சித் தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனாவுக்கு சிறந்த பெண்மணிக்கான விருது வழங்கப்பட்டுள்ளதை ஒட்டி, அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
நகர்மன்றத் தலைவராகப் பணியாற்றி வரும் இவர், மரபு சாரா எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்புத் திட்டம், பசுமையான நகரத்திற்கு அடித்தளம் அமைக்க செயல் திட்டம், பாலிதீன் ஒழிப்புத் திட்டம், நிலத்தடி நீரின் வளம் காப்பதற்கான திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் சிறப்பாக செயலாற்றி வருவதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கோவை பிஎஸ்ஜி மேலாண்மை கல்வி நிறுவனத்தில் நடந்த விழாவில் உடுமலை நகராட்சித் தலைவர் கேஜிஎஸ்.ஷோபனாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது .
இதையொட்டி உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் ஷோபனாவுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் மற்றும் பணியாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.