தினமணி 24.05.2010
உயர் கோபுர மின் விளக்கு, பூங்கா திறப்பு
திண்டுக்கல், மே 23: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ரூ.25.5 லட்சம் மதிப்பிலான உயர் கோபுர மின் விளக்குகள் மற்றும் வெள்ளி நீர் வீழ்ச்சி பூங்காவை வருவாய்த் துறை அமைச்சர் இ.பெரியசாமி சனிக்கிழமை திறந்து வைத்தார்.
கொடைக்கானலில் 49-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
அப்போது நகராட்சிக்கு உள்பட்ட நாயுடுபுரம், அண்ணா நகர், வெள்ளி நீர் வீழ்ச்சி அருகில் சுற்றுலாப் பயணிகள் பயனடையும் வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவை அமைச்சர் திறந்து வைத்தார்.
விழாவில் மாவட்ட ஆட்சியர் மா.வள்ளலார், என்.எஸ்.வி. சித்தன் எம்.பி., அரசு தலைமைக் கொறடா அர.சக்கரபாணி, மா.அன்பழகன் எம்.எல்.ஏ., நகர்மன்றத் தலைவர் முகமது இப்ராகிம், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் அப்துல் ரசாக் ஆகியோர் கலந்து கொண்டனர்.