தினமலர் 02.09.2010
உள்ளகரத்தில் மழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை
உள்ளகரம்:உள்ளகரம் – புழுதிவாக்கத்தில் வரும் மழைக்காலத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.உள்ளகரம் – புழுதிவாக்கத்தில் பெரும்பாலான பகுதிகள் மிகவும் தாழ்வானவை. ஒவ்வொரு மழைக்காலத்திலும் குடியிருப்புகளில் மழைநீர் தேங்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தும். இதற்கு முக்கிய காரணம் வீராங்கல் ஓடை முழுமையாக சீரமைக்காததுதான்.
இந்த ஆண்டு வீராங்கல் ஓடையை பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி சார்பில் பல கோடி ரூபாய் மதிப்பு சீரமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. ஆனால், வரும் மழைக்காலத்திற்குள் இப்பணிகள் நிறைவடையாது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால்வாய் பராமரித்தல், மணல் மூட்டைகள் அடைப்பு எடுத்தல் வெள்ள நீரை வெளியேற்ற ஆயுள் இன்ஜின் வாடகைக்கு அமர்த்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள 2.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்குவது என நகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.