தினமணி 26.04.2010 உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு உரிய அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்
புதுச்சேரி, ஏப்.25: புதுச்சேரியில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று புதுச்சேரி நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்புத் தலைவர் அனிபால் நேரு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியது,
÷ உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு உரிய அதிகாரமளிப்பது குறித்து எந்த ஒரு கட்சியும் வலியுறுத்துவதில்லை. அதனால் தான் தேர்ந்தெடுக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும், அவர்களுக்கான அதிகாரங்களும், போதிய நிதி ஒதுக்கீடும் செய்யப்படாமலேயே காலம் கடத்தப்படுகின்றது.
÷புதுவையில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் குறைந்தப்பட்ச மக்கள் பணியை செய்யக்கூட அதிகாரம் இல்லாமல் மிகவும் வஞ்சிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர்.
÷வீதிகளுக்கு பெயரை மாற்றுவது, புதிதாக பெயர் வைப்பது போன்ற வேலைகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் வேலைகளில் ஒன்று. ஆனால் அந்த உரிமைகளை கூட விட்டுவைக்காமல் சில எம்.எல்.ஏ.க்கள் வீதி பெயர் பலகை வைக்கிறோம் என்ற பெயரில், பெயர் பலகையில் தங்கள் பெயரை எழுதி வைத்து விளம்பரம் தேடிக்கொள்கின்றனர்