தினகரன் 29.06.2010
உள்ளாட்சி இடைத்தேர்தல் தேர்தல் அலுவலர் இன்று ஆய்வு
கோவை
, ஜூன் 29: கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 24 பதவியிடங்களுக்கு தேர்தல் நடத்துவது குறித்து முதன்மை தேர்தல் அலுவலர் (ஊரகம்) நிர்மலா தலைமை யில் இன்று ஆய்வுக்கூட்டம் நடக்கிறது.தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி இடங்களில் அடுத்த மாதம் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. மாவட்டம் தோறும் காலியாக உள்ள உள்ளாட்சி இடங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் நடத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆய்வுக் கூட்டம் நடக்கிறது
. முதன்மை தேர்தல் அலுவலர் (ஊரகம்) நிர்மலா ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று தேர்தல் நடத்துவது தொடர் பான ஆலோசனைகளை வழங்க இருக்கிறார்.கோவை மாநகராட்சியில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்ய இருக்கிறார்.கோவை மாவட்டத்தில் குனியமுத்தூர்
3ம் நிலை நகராட்சி ஒரு கவுன்சிலர் பதவி, ஆனை மலை ஒன்றியம் ஜல்லிப்பட்டி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி, பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் வீரப்பட்டி பஞ்சாயத்து தலைவர பதவி, ஆனை மலை, அன்னூர், காரமடை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வடக்கு, சூலூர், தொண்டாமுத்தூர் ஊராட்சிக்குட்பட்ட 14 உறுப்பினர் பதவி இடங்கள், கருமத்தம்பட்டி, கிணத்துக்கடவு, வீரபாண்டி, வேட்டைக்காரன்புதூர், வேடபட்டி, சமத்தூர், சிறுமு கை ஆகிய பேரூராட்சிகளில் உள்ள 7 கவுன்சிலர் பதவி இடங்கள் காலியாக உள் ளது. மொத்தம் உள்ள 24 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.