தினமலர் 19.01.2011
உள்ளாட்சி நிர்வாக சட்டம்: கவுன்சிலர்களுக்கு பயிற்சி
கோவை : உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அலுவலர்கள், கவுன்சிலர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு உள்ளாட்சி நிர்வாக சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை பற்றிய 2 நாள் பயிற்சி கோவையில் நேற்று நடந்தது. உள்ளாட்சி அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள், பணியாளர்கள் என, மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பயிற்சி நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக கவுன்சிலர்களுக்கு நடந்த பயிற்சியில், உள்ளாட்சி நிர்வாகத்தில் மேற்கொள்ளவேண்டிய விதிமுறைகள் மற்றும் கையாளவேண்டிய சட்டங்கள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. புதிதாக இயற்றிய 18 உள்ளாட்சி சட்டங்கள் குறித்தும். அதை நடைமுறைப்படுத்துவது, பொதுமக்களுக்கு எளிமையாக தெரியச்செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சியை ஓய்வு பெற்ற மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்கள், வட்டாரவளர்ச்சி அலுவலர்கள், இன்ஜினியர்கள் பயிற்சியளித்தனர். கோவை மாநகராட்சி சார்பில் ஆளும்கட்சி, எதிர்கட்சி மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் ஏழு பேர் பங்கேற்றனர். இப்பயிற்சி இன்றும் நடக்கிறது.