தினமலர் 24.08.2010
உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அடிப்படை ஆதார பயிற்சி திருக்கோவிலூரில் நடந்தது
திருக்கோவிலூர்
, ஆக. 24: பிற்படுத்தப்பட்ட மண்டலங்களுக்கான மானிய நிதி திட்டத்தின் கீழ் பணிகள் தேர்வு செய்வதற்காக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகள் தேர்வு செய்யப்பட்டது. இதில் விழுப்புரம் மாவட்டமும் ஒன்று.இதற்காக
, பிற்படுத்தப்பட்ட மண்டலங்களுக்காக மானிய நிதி திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யும் நிதியை கையாளும் முறை குறித்து உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக் கும், அலுவலர்களுக்கும் அடிப்படை ஆதார பயிற்சி திருக்கோவிலூரில் நடந் தது. திருக்கோவிலூர் பேரூராட்சி மன்ற தலைவர் ஆண்டாள் வரவேற்றார். செஞ்சி பேரூராட்சி தலை வர் மஸ்தான் வாழ்த்துரை வழங்கினார்.கோவை தமிழ்நாடு நகரி யல் பயிற்சி மைய பயிற்சியாளர் வெங்கடேஷ் கலந்துகொண்டு
, பிற்படுத்தப்பட்ட மண்டலங்களுக்கான மானிய நிதி திட்டத்தின்கீழ் ஒதுக்கீடு செய்யும் நிதியை அரசின் விதிமுறைகளுக்கு ஏற்றவாறு ஒதுக்கீடு செய்து, அதில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளை தொய்வில்லாமல் உரிய காலத்தில் முடிக்க வேண்டும்.மேலும் ஒரு சில பேரூராட்சிகள் போதிய நிதி ஆதாரம் இல்லாமல் இருக்கிற சூழ்நிலையில்
, இதுபோன்ற நிதி ஒதுக்கப்பட்டுள்ள பேரூராட்சிகள் அந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ள வேண்டும், என்றார். தொடர்ந்து உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் இந்த திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கேற்றவாறு பணிகளை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து பயிற்சி அளித்தார்.திருக்கோவிலூர்
, வடக்கநந்தல், செஞ்சி, அனந்தபுரம் ஆகிய பேரூராட்சி களை சேர்ந்த பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், கவுன்சிலர்கள், ஊழியர்கள், பேரூ ராட்சி செயல் அலுவலர் கள் தமிழ்ச்செல்வன், கன்னியப்பன், பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.திருக்கோவிலூரில் நடந்த உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கான அடிப்படை ஆதார பயிற்சியில் நகரியல் பயிற்சி மைய பயிற்சியாளர் வெங்கடேஷ் பேசினார்.