தினகரன் 30.09.2010
உள்ளூர் திட்டக்குழும குறைதீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடி, செப். 30: தூத்துக்குடியில் உள்ளூர் திட்டக்குழும குறைதீர்க்கும் கூட்டம் நகர் ஊரமைப்பு இயக்குனர் பங்கஜ் குமார் பன்சால் தலைமையில் நடந்தது.
தூத்துக்குடி உள்ளூர் திட்டக்குழுமம் தொடர்பான பிரச்னைகள் குறித்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிவதற்காக நகர் ஊரமைப்பு இயக்குனர் பங்கஜ் குமார் பன்சால் தூத்துக்குடி வந்தார். அவர் தூத்துக்குடி உள்ளூர் திட்டக்குழும அலுவலகத்தில் உள்ளூர் திட்டக்குழுமம் தொடர்பான குறைகளை பொதுமக்களிடம் கேட்டறிந்தார். உள்ளூர் திட்டக்குழும உதவி இயக்குனர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பங்கஜ் குமார் பன்சால் கூறுகையில், “பொதுமக்கள் 10 ஆயிரம் சதுர அடியில் கடை கட்டினால் அதன் மேற்பகுதியில் 15 ஆயிரம் சதுர அடி வரை கட்ட அனுமதி வழங்கப்பட்டு வந்தது. தற்போது மேற்பகுதியில் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் சதுர அடி வரை கட்டிடங்கள் கட்டலாம்.
மேலும் உள்ளூர் திட்டக்குழும விவரங்கள் அனைத்தும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் 127 மாஸ்டர் பிளான்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வெளியிடப்பட்டு உள்ளன. இதனை பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்” என்றார்.