உள்வாடகைக்கு விடப்பட்ட பேருந்து நிலைய வணிக வளாக நகராட்சி கடை பொது ஏலம்
மேட்டுப்பாளையம் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் உள்ள நகராட்சிக்கடை ஒன்று, உயர்நீதிமன்ற ஆணைப்படி பொது ஏலத்தில் விடப்பட்டது.
மேட்டுப்பாளையம் நகராட்சி கட்டுப்பாட்டில் நகரின் பல்வேறு இடங்களில் 239 வணிக வளாக கடைகள் உள்ளன. இதில் பேருந்து நிலைய வளாகம் மற்றும் அண்ணா வணிக வளாகத்தில் மட்டும் 97 கடைகள் வாடகைக்கு விடப்பட்டு ள்ளன. இந்த கடைகள் கடந்த 1984-ம் ஆண்டுமுதல் குறைந்த வாடகைக்கு விடப்பட்டிருந்ததால், நகராட்சிக்கு போதிய வருமானம் இல்லாமலிருந்து வந்தது. சமீபத்தில் நகராட்சி அதிகாரிகள் பேருந்து நிலைய கடைகளில் ஆய்வு மேற்கொண்டபோது பெரும்பான்மையான கடைகளின் முன்னும், பின்னும் இட ங்களை ஆக்கிரமிப்பு செய்து, அதில் கடைகளை கட்டி உள்வாடகைக்கு விட்டி ருப்பதும் தெரிய வந்தது. இதன் மூலம் நகராட்சிக்கு வாடகையாக மாதம் ரூ 2700 செலுத்தும் ஒருவர், உள்வாடகை மூலம் மட்டும் மாதம் ரூ 20,000 வரை வருமானம் ஈட்டுவது கண்டறியப்பட்டது.
இதை தொடர்ந்து நகராட்சியின் வருமானத்தை அதிகரிக்க செய்யும் வகையில், பேருந்துநிலைய ஆக்கிரமிப்புக்களை அகற்றி, கடைகளை புதியதாக பொது ஏலம் விடவும் நகராட்சியில் புதியதாக பதவியேற்ற ஆணையர் சரவணக்குமார் நடவடி க்கை மேற்கொண்டார். அதை தொடர்ந்து பேருந்து நிலைய வணிக வளாகத்தில் நகராட்சி சார்பில் மேற்கொண்ட ஆய்வில் 27-ம் எண் கொண்ட கடை உள்வாட கைக்கு விட்டிருப்பது கண்டறியப்பட்டது. கடந்த 1984-ம் ஆண்டு அன்னூர் சர் வோதய சங்கத்தின் சார்பில் வாடகைக்கு எடுக்கப்பட்ட அந்த கடைக்கு ரூ 2706 வாடகை செலுத்தி வந்ததும், பின்னர் வேறொருவருக்கு உள்வாடகைக்கு விட்டு அதிக வாடகை வசூலிப்பது்ம் தெரிய வந்தது. இதையடுத்து அந்த கடைக்கு நக ராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அதை தொடர்ந்து உள்வாடகைக்கு விடப்பட்ட கடையை மறு ஏலத்தில் விடுவதா க நகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த ஏலத்திற்கு தடை விதி க்கக்கோரி அன்னூர் சர்வோதய சங்கத்தினர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதற்கு ஆதரவாக வேறு சில கடைக்காரர்களும், நகர மன்ற உறுப்பினர்கள் 13 பேரும் உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த னர். இந்த மனுக்கள் மீது விசாரனை நடத்திய உயர்நீதிமன்றம், நகராட்சி எடுத்த முடிவு சரியானதெனவும், சீல் வைக்கப்பட்ட கடையை மட்டுமின்றி, அனைத்து கடைகளையும் நகராட்சி பொது ஏலம் விடலாமெனக் கூறி, அனைத்து மனுக்க ளையும் கடந்த 12-ம் தேதி தள்ளுபடி செய்தது. அதையடுத்து 27-ம் எண் கொண் ட கடையை, டிச. 29-ல் பொது ஏலம் விட நகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியி டப்பட்டது.
அதன்படி திங்கட்கிழமை (டிச.29) நகராட்சி ஆணையர் சரவணக்குமார் முன்னி லையில் நகராட்சி மேலாளர் சித்தார்த்தன் நடத்திய ஏலத்தில், 27-ம் எண் கடை மாத வாடகையாக ரூ 16,500-க்கு ஏலம் போனது. இதனை மீனாட்சிசுந்தரம் என்பவர் ஏலத்தில் எடுத்தார். இந்த கடைக்கு முந்தைய ஏலத்தில் ரூ 2706 மட்டு மே வாடகை செலுத்தப்பட்டு வந்தது. இந்த கடையை புதியதாக ஏலம் விட்டதன் மூலம் நகராட்சியின் வருவாய் 6 மடங்கு வரை அதிகரித்துள்ளது. ஆண்டிற்கு ரூ 32 ஆயிரம் மட்டுமே வாடகை வருவாயை பெற்றுத்தந்த இந்த கடை தற்போது ரூ 1.98 லட்சம் வரை வாடகை வருவாய் கிடைக்க நகராட்சிக்கு வழி ஏற்படுத்தி தந்துள்ளது. அதேபோல் இங்குள்ள 208 கடைகளையும் புதியதாக பொது ஏலத் திற்கு விட்டால், தற்போது மாதம் ரூ 75-லட்சமாக இருக்கும் நகராட்சி வருவாய் ரூ 3 கோடிக்கு மேல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகவே அனைத்து கடைகளை யும் மீண்டும் பொது ஏலம் விட்டு நகராட்சியின் வருவாயை அதிகரிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே மேட்டுப்பாளையம் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.