தினமணி 17.09.2010
உழவர்கரை நகராட்சிக்கு நன்றி
புதுச்சேரி, செப்.16: புதுச்சேரி லாஸ்பேட்டையில் கடந்த ஓராண்டாக ஊர்மக்களை அச்சுறுத்தி வந்த தெருநாய்களை உழவர்கரை நகராட்சி பிடித்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
அதனால் நகராட்சிக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று பாஜக செயலர் ஆர்.வி.சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
லாஸ்பேட்டை பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக இருந்து வந்தது. இது குறித்து பாஜக சார்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றதால், உள்ளாட்சி அதிகாரிகள் நேரடி கண்காணிப்பில் தெருநாய்கள் பிடிக்கப்பட்டுள்ளது. அதனால் உள்ளாட்சித் துறைக்கும், நகராட்சிக்கும் ஊர் பொதுமக்கள் மற்றும் பாஜக சார்பில் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். லாஸ்பேட்டை பகுதியில் குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் போராட்டம் நடத்தியதன் வாயிலாக, தற்போது குடிநீர்த் தேக்கத் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு உறுதுணையாக இருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.