தினத்தந்தி 08.10.2013
உழவர்கரை நகராட்சியில் குப்பைகளை அகற்ற நவீன லாரி

புதுச்சேரி உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிடக்கும்
குப்பைகளை சேகரித்து சுகாதாரமான முறையில் குப்பைகளை மூடி எடுத்து செல்ல
ரூ.33லட்சம் செலவில் நவீன லாரியும், 1100லிட்டர் கொள்ளளவு உள்ள குப்பை
தொட்டிகளும் வாங்கப்பட்டுள்ளது. இந்த நவீன லாரியை மக்கள் பயன்பாட்டிற்கு
விடும் நிகழ்ச்சி இன்று காலை அஜிஸ் நகரில் நடந்தது.
நிகழ்ச்சியில் அமைச்சர் பன்னீர் செல்வம் கலந்து கொண்டு நவீன லாரியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.