தினமணி 17.04.2010
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் கணினி மூலம் வரி ரசீது
திருவள்ளூர், ஏப். 16: திருவள்ளூரை அடுத்த ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் கணினி மூலம் வரி ரசீதுகள் வழங்கும் சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
÷திருவள்ளூரை அடுத்த ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் இதுவரை வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி போன்ற வரிகளை வசூலிக்க ரசீது புத்தகம் மூலம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதில் ஒவ்வொருவரின் கணக்குகளையும் தேடி எடுத்து ரசீது போட்டு அதை லெட்ஜரில் வரவு வைப்பதும் மக்களுக்கும், நிர்வாகத்தினருக்கும் சிரமமாக இருந்தன.
÷சிரமத்தை போக்கும் வகையில் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் வியாழக்கிழமை முதல் கணினி மூலம் வசூலிக்கும் வரிகளுக்கு ரசீது வழங்கும் சேவை தொடங்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் அபிராமி சேவையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின்போது பேரூராட்சி செயல் அலுவலர் பெரியசாமி, துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.