தமிழ் முரசு 29.04.2013
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் மகளிர் குழு பெண்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி சார்பில், எஸ்ஜெஎஸ்ஆர்ஒய்
திட்டத்தின் கீழ் மகளிர் குழுக்களை சேர்ந்த 51 பெண்களுக்கு இலவச
கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் தொடக்க விழாவுக்கு செயல்
அலுவலர் மகேஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்
ராசமாணிக்கம், பேரூராட்சி துணைத் தலைவர் ஷேக்தாவூத் ஆகியோர் பயிற்சியை
தொடங்கி வைத்தனர்.
மகளிர் குழுவை சேர்ந்த பெண்கள், கம்ப்யூட்டர் கற்றுக்கொண்டு சுயவேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
பெண்கள்
முன்னேற்றத்துக்கு கணினி பயிற்சி உதவும். 90 நாட்கள் பயிற்சி
அளிக்கப்படும். இந்த பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெரம்பூரில் உள்ள நேஷனல் அகடமி எஜுகேஷன் ஊழியர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.