தினகரன் 01.12.2010
ஊழியர்களை மிரட்டுகிறார்கள் மாநகராட்சியில் இடைத்தரகர்கள் மன்ற கூட்டத்தில் கமிஷனர் பகிரங்கம்
கோவை, டிச 1: கோவை மாநகராட்சி அலுவலகங்களில் இடைத்தரகர்கள், புரோக்கர்கள் நடமாட்டம் இருப்பது உண்மை தான். இதை களையெடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் கமிஷனர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி கவுன்சில் கூட்டம் நேற்று மேயர் வெங்கடாச்சலம் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் பல் வேறு பிரச்னைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசினர்.
கவுன்சிலர் பிரபாகரன் பேசுகையில், மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் புரோக்கர்கள், இடைத்தரகர்கள் தலையீடு உள்ளது. குறிப்பாக மாலை நேரங்களில் அரசியல் கட்சிகளின் போர்வையில் வரும் இத்தகைய புரோக்கர்கள், ஊழியர்களை மிரட்டும் நடவடிக்கையிலும் ஈடுபடுகின்றனர்.
ஆணையர், துணை ஆணையர் அவ்வப்போது அதிரடி ஆய்வு நடத்தி இடைத்தரகர் தலையீட்டை தடுக்கவேண்டும்,” என்றார். அப்போது குறுக்கிட்ட கவுன்சிலர்கள் பலரும் இந்த கருத்தை அமோதித்தனர்.
இதற்கு பதிலளித்த மாநகராட்சி ஆணையர் அன்சுல்மிஸ்ரா, “வடக்கு மண் டல அலுவலகம் மட்டுமில் லை. மாநகராட்சியின் பல் வேறு பிரிவு அலுவலகங்களிலும் புரோக்கர்கள் தலை யீடு உள்ளது.
மாநகராட்சியில் வெளிப் படையான நிர்வாகம் இருக்கவேண்டும் என்பதற்கான சில நடவடிக்கைகள் எடுக்கிறோம். சில விண்ணப்பங்களில் பயனாளிகள் போட் டோ ஒட்டுவது கட்டாயமாக்கப்படுவது கூட இது போன்ற குறைகளை தவிர்ப்பதற்கு தான்.
இதற்கு கவுன்சிலர்கள் ஒத்துழைப்பும் அவசியம். புரோக்கர்கள் நடமாட்டம் உள்ள அலுவலகங்களில் அவ்வப்போது சோதனை நடத்தி தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என் றார்.
கோவை மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில் சுயேட்சை கவுன்சிலர் வேல்முருகன் மேயரை வரம்பு மீறி பேசியதால் அவரை மேயர் இரண்டு கூட்டத்திற்கு சஸ்பெண்ட் செய்தார். அதனால் மேயரை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு அவர் மன்ற கூட்டத்தை விட்டு வெளியேறினார்.