தினமணி 02.09.2013
தினமணி 02.09.2013
எடப்பாடியில் குடிநீர்த் தொட்டிகள் திறப்பு
எடப்பாடி நகராட்சியில் மின் மோட்டார் மூலம்
பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் குடிநீர்த் தொட்டிகளை அமைச்சர் எடப்பாடி
கே.பழனிச்சாமி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
எடப்பாடி நகராட்சிக்கு உள்பட்ட வெள்ளாண்டிவலசு, ஆலச்சம்பாளையம்,
கவுண்டம்பட்டி, நடுத்தெரு ஆகிய பகுதிகளில் மின்சார மோட்டார் மூலம் குடிநீர்
எடுத்து, மக்களுக்கு விநியோகம் செய்யும் வகையில், 14 குடிநீர்த்
தொட்டிகளையும், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட அங்கன்வாடி
மையங்களையும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி திறந்து
வைத்தார்.
நகர்மன்றத் தலைவர் டி.கதிரேசன், துணைத் தலைவர் ராமன், ஆலச்சம்பாளையம் நாராயணன், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.