தினமணி 13.02.2014
எடப்பாடியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
தினமணி 13.02.2014
எடப்பாடியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
எடப்பாடி நகராட்சிக்குள்பட்ட கவுண்டம்பட்டியில்
புதிதாக சிமென்ட் சாலைகள் அமைக்கும் பணியை நகர்மன்றத் தலைவர் டி.கதிரேசன்
தொடக்கி வைத்தார் .
கவுண்டம்பட்டி பகுதியில் சிமென்ட் சாலைகள் அமைக்க ரூ. 65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பணிகளை நகர்மன்றத் தலைவர் டி.கதிரேசன் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
இதில், துணைத் தலைவர் சி.ராமன், நகரமன்ற உறுப்பினர்கள் அழகம்பெருமாள், தனம், செல்வம், சீனிவாசன், சாந்தி
நாகராஜன், அரசு வழக்குரைஞர் செந்தில்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.