தினகரன் 11.08.2010
எண்ணெய் கசிவு எதிரொலி மீன் உணவு சாப்பிட வேண்டாம்
மும்பை, ஆக.11: கடந்த சனிக்கிழமை மும்பை துறை முகம் அருகே இரண்டு சரக்கு கப்பல்கள் மோதின. ஒரு கப்பலில் இருந்து எண் ணெய் கசிவு ஏற்பட்டதால் கடல் பகுதி மாசுபட்டு வரு கிறது. இதை கட்டுப்படுத்தும் வரையில் மும்பை கடல் பகுதியில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்னும் சில நாட்களுக்கு மீன் சாப் பிட வேண்டாம் என பொதுமக்களை மும்பை மாநகராட்சியும் ராய்கட் மாவட்ட நிர்வாகமும் கேட்டுக் கொண்டுள்ளன.
எனினும் கடலில் எண் ணெய் கசிவு ஏற்பட்டுள்ள சம்பவம் தங்களின் வாழ்க் கையை பாதிக்காது என்று மீனவர் சமுதாயத்தினர் தெரிவித்துள்ளனர். “மழைக் காலத்தில் வியாபாரம் குறைவாகவே இருக்கும். மேலும் ஷ்ராவண் மாதத்தில் இந்துக்கள் மீன் சாப்பிட மாட்டார்கள் என்பதால் அவர்களுக்கும் இதனால் பாதிப்பு இல்லைÓ என்று அவர்கள் கூறினர்.
மகாராஷ்டிரா மீனவர் சங்கத் தலைவர் மோரேஷ் வர் பாட்டீல் இது பற்றி கூறுகையில், “மழைக் காலத் தில் மும்பை மார்க் கெட்டு களில் கிடைக்கும் மீன்களில் பெரும்பாலா னவை மேற்கு வங்கத்தில் உள்ள டயமண்ட் துறைமுகம், ஒரிசாவின் பிரதீப் துறைமுகம் மற்றும் ஆந்திரா, குஜராத் போன்ற வெளி இடங்களில் இருந்து தான் கொண்டு வரப்படு கின்றனÓ என்றார்.
மும்பை மீன் மார்க் கெட்டுகளில் பாம்ப்ரட், ராவஸ், கோல், சுர்மாய், பாம்பே டக், கேட்பிஷ், லாப்ஸ்டர் போன்ற மீன் வகைகள் விற்பனை செய்யப் படுகின்றன. இவை அனைத் தும் வெளியிடங்களில் பிடிக் கப்படும் மீன்கள் ஆகும்.
கடல்வாழ் உயிரின வல் லுனர் டாக்டர் பி.எப்.சாப் கர் கூறுகையில், “பெரும் பாலான மீன் வகைகள் சாப்பிடுவதற்கு தகுதியான வைதான். தண்ணீரை விட எண்ணெய் அடர்த்தி குறைவு என்பதால் அது கடலில் மிதக்கிறது. ஆனால் பொதுவாக நாம் சாப்பிடக்கூடிய மீன்கள் மிகவும் ஆழமான கடல் பகுதியிலேயே காணப் படுகின்றன. எனவே இவற்றை சாப்பிடுவதால் எந்த தீங்கும் ஏற்படாது. மட்ஸ்கிப்பர் என்ற மீன் வகையை மட்டும் தவிர்ப்பது நல்லதுÓ என்றார்.
எனினும் எண்ணெய் கசிவின் சேதங்கள் குறித்து முழுமையாக மதிப்பீடு செய்யப்படும் வரை மீன் சாப்பிடுவதை தவிர்க்கும்படி இந்துஜா மருத்துவமனை டாக்டர் குஸ்ரவ் பஜன், பொதுமக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.