தினமலர் 22.07.2010
எரியோடு பேரூராட்சி கூட்டம்
வடமதுரை: எரியோடு பேரூராட்சிக் கூட்டம் தலைவர் மஞ்சுளாஜீவா தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் விஜயநாத் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் கிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மரவபட்டியில் 2.80 லட்ச ரூபாயில் அங் கன்வாடி மையம் கட்டடமும், மத்தனம்பட்டிபுதூர் மற்றும் குரும்பபட்டியில் 2.10 லட்ச ரூபாயில் கலையரங்கம் அமைக்கும் பணி க்கும் ஒப்புதல் தரப் பட்டது.