தினமணி 13.10.2010
எரிவாயு தகன மேடை கட்டுமானப் பணி நிறைவடைவது எப்போது
?மன்னார்குடி
, அக். 12: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நகராட்சி சார்பிலான எரிவாயு தகன மேடை கட்டும் பணியை தொய்வில்லாது, விரைந்து முடிக்க வேண்டும் என இந்த பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.மன்னார்குடியில் உள்ள
33 வார்டுகளில் 15 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இதில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். நகரப் பகுதியில் வசிப்பவர்களில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் தவிர மற்றவர்கள் மரணமடைந்தால் எரியூட்டுவதற்கும், புதைப்பதற்கும் என எட்டு மயானங்கள் உள்ளன.இந்நிலையில்
, கடந்த 2008-ம் ஆண்டு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், மன்னார்குடி நகரத்துக்குள்பட்ட பகுதியில் மின்சாரம், எரிவாயு மூலம் தகன மேடை அமைப்பது என முடிவு செய்யப்பட்டு, அதுதொடர்பாக அரசுக்கு கருத்துருவும் அனுப்பப்பட்டது.அரசும் இதற்கு ஒப்புதல் அளித்து
, உரிய இடத்தை தேர்வு செய்து அனுப்புமாறு நகராட்சி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியது. இதையடுத்து, வடசேரி சாலையில் தகனமேடை அமைப்பது என நகராட்சி நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.எரிவாயு தகன மேடை அமைக்க
2009-ல் அரசு சார்பில் 40 லட்சம் வழங்கப்பட்டு, மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனம் கட்டுமானப் பணிகளை தொடங்கியது. இந்தப் பணிகளுக்காக இரும்பால் ஆன 30 அடி உயரம் உள்ள புகைக்கூண்டு, மரக்கதவு, ஜன்னல் ஆகியவை கொண்டு வரப்பட்டன. 30 சத அளவுக்கு கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், திடீரென பணிகள் நிறுத்தப்பட்டன. பணிகள் நிறுத்தப்பட்டு ஓர் ஆண்டுக்கும் மேலாகியுள்ள நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த தளவாடப் பொருள்கள் காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இரும்புக் குழாய்கள் துருப்பிடித்து சேதமடையும் நிலையும் ஏற்பட்டு உள்ளது.“
எரிவாயு தகன மேடை கட்டும் பணியை தடையில்லாது, விரைந்து தொடர வேண்டும் என அந்த நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. திட்டத்தில் அரசு அளிக்க வேண்டிய எஞ்சிய தொகையை விரைந்து பெற்று, விரைவில் தகன மேடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, முடிக்கப்படும்‘ என்கின்றனர் நகராட்சி நிர்வாகத்தினர்.எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிகளை தொய்வில்லாது
, விரைந்து தொடங்கி, உரிய காலத்துக்குள்ளாக பணிகளை முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே மன்னார்குடி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.