தினமணி 08.04.2010
ஏப்., மே மாதங்களில் பிறப்பு சான்றுகள் இலவசம்
திருச்சி, ஏப். 7: திருச்சி மாவட்டத்தில் பிறப்பு பதிவு செய்யப்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் ஏப்., மே மாதங்களில் பிறப்புச் சான்றுகள் இலவசமாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் பிறப்பு, இறப்புச் சான்றுகளை இலவசமாக வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் பிறப்புப் பதிவு செய்யப்பட்டுள்ள 5 வயது குழந்தைகள் அனைவருக்கும் இலவசமாக பிறப்புச் சான்றுகள் வழங்கப்படும்.
மாநகராட்சி, நகராட்சி, மற்றும் உள்ளாட்சிகளிலுள்ள அனைத்து பிறப்பு, இறப்புப் பதிவு மையங்களில் இவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். குழந்தை பிறப்பைப் பதிவு செய்து, பெயரைப் பதிவு செய்யாமலிருந்தால் காலதாமதக் கட்டணம் ரூ. 5 மட்டும் செலுத்தி பதிவு செய்துகொள்ளலாம் என்றார் அவர்.