தினமலர் 24.04.2010
ஏர்போர்ட் எதிரே ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திரிசூலம் : சென்னை விமான நிலையம் எதிரே, திரிசூலம் ரயில்வே கேட்டிலிருந்து ஜி.எஸ்.டி., சாலைக்கு செல்லும் வாகனங்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகள், நேற்று அதிரடியாக அகற்றப் பட்டன. அங்குள்ள கட்சி கொடி கம்பங்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந் துள்ளது.சென்னை விமான நிலைய மேம்பாலம் கட்டப்பட்ட பிறகு, திரிசூலம் ரயில்வே கேட் சாலை – ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பில் பஸ் ஸ்டாப் இடமாற்றம் செய்யப் பட் டது. பஸ் ஸ்டாப் அமைந் துள்ள இடத்தில் நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்து, கடைகள் போடப்பட்டுள்ளன. இதனால் திரிசூலத்திலிருந்து ஜி.எஸ்.டி., சாலைக்கு வரும் வாகனங் களுக்கும், ஜி.எஸ்.டி., சாலையில் செல்லும் வாகனங்களுக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.
மேலும், சென்னை விமான நிலையம் எதிரே ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாலும், திரிசூலத் திற்கு பஸ் ஸ்டாப் அமைக்க திட்டமிட்டிருப் பதாலும், அங்கு ஆக் கிரமிப்புக்களை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் முடிவு செய்தனர். இதற்காக நேற்று காலை திரிசூலம் பஸ் ஸ்டாப் அருகே இருந்த கடைகளை இடித்து தள்ளினர். சைதாப்பேட்டை 16 கடைகள் அகற்றம்: நந்தனம் அருகில், சைதாப் பேட்டையில் கால்நடை மருத்துவமனை அருகில், மாநகராட்சிக்குச் சொந்தமான 8,000 சதுரடி நிலம் உள்ளது.
இந்த நிலத்தில் ஜெராக்ஸ் கடை, டீக் கடை, சைக்கிள் கடை உள் ளிட்ட 16 கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தன. சென்னை மாநகராட்சி, ஒன்பதாவது மண்டல உதவி இன்ஜினியர் யோகானந்த் பாபு தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள், இவற்றை அகற்றும் முயற்சியில் இறங்கினர். இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அனைத்து கடைகளும் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தின் தற்போதைய மதிப்பு 10 கோடி ரூபாய்.