தினமலர் 17.04.2010
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டை இடம் மாற்ற அதிகாரிகள் ஆலோசனை
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட், புதிதாக கட்டப்பட்டுள்ள வேளாண் விளை பொருள் பேரங்காடிக்கு மாற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஒ., நாராயணன் தலைமையில் நடந் தது.ஒட்டன்சத்திரம்–நாகணம்பட்டி பைபாஸ் ரோட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 3.06 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய வேளாண் விளைபொருள் பேரங்காடி கட்டப் பட்டுள்ளது. டெண்டர் விடப்பட்டு பல நாட்கள் கடந்த பின் பும் இன்னமும் செயல்படாமல் பூட்டிக் கிடக்கிறது. தற்போது ஒட்டன்சத்திரம் பஸ்ஸ்டாண்டிற்கு எதிரில் உள்ள காய்கறி மார்க்கெட் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வருகிறது. ஆனால் வேளாண் விளைபொருள் பேரங்காடி திண்டுக்கல் வேளாண் விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள காய்கறி மார்க்கெட்டை வேளாண் விளைபொருள் பேரங்காடிக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்டத்தில் பங்கேற்ற காய்கறி மார்க்கெட் சங்க நிர்வாகிகள் தற்போது உள் ளது போல் பேரூராட்சிக்கு சொந்தமான இடமாக இருந்தால் அங்கு செல்வதாக தெரிவித்தனர். பேரங்காடி வேறு துறையின் கீழ் உள்ளது. பேரூராட்சிக்கும், அதற்கும் சம்பந்தமில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. பின்னர் மற்ற கடைக்காரர்களிடம் ஆலோசித்து கூறுவதாக மார்க்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். ஒட்டன்சத்திரம் தாசில்தார் பசீர், டி.எஸ்.பி., அரங்கசாமி, பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்கொடி உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.