ஒண்டிப்புதூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய டிசைன்களை இறுதி செய்ய மாநகராட்சி தீவிரம்
கோவை மாநகராட்சியின் சார்பில் ஒண்டிப்புதூரில் கட்டப்பட உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் டிசைன்களை இறுதி செய்வதற்கான பணிகளில் மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.
இதற்காக அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களிடம் மாநகராட்சி ஆலோசனை செய்து வருகிறது.
கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் உள்ள சுமார் 2 லட்சம் வீடுகளிலிருந்து கழிவு நீர், ஒண்டிப்புதூரில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படும்.
சுற்றுச் சூழலைப் பாதிக்காத வகையில் ஒண்டிப்புதூரில் நவீன முறையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
தொழில்நுட்பக் குழுவுக்கு ரூ.38 லட்சத்தை ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.