ஒரு வீட்டுக்கு பல சொத்துவரிகள் வசூலித்தால் புகார் அளிக்கலாம்
ஒரு கதவு எண் கொண்ட அடுக்கு வீடுகளுக்கு பல சொத்து வரிகள் வசூல் செய்வது குறித்து மனு அளித்தால் ஆய்வு செய்யப்படும் என்று மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.
மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் உறுப்பினர் (வார்டு 9) மு. தனரமேஷ் (படம்) கேள்வி எழுப்பினார். திருவொற்றியூர் மற்றும் கத்திவாக்கம் பகுதிகள் நகராட்சியாக இருந்தபோது, ஒரு கதவு எண் கொண்ட வீட்டுக்கு கீழ்தளம் மற்றும் முதல் தளம் என இரண்டு வரி மதிப்பீட்டு எண்கள் கொடுக்கப்பட்டு தனித்தனியாக சொத்துவரி வசூல் செய்யப்பட்டது.
இந்த முறை ரத்து செய்யப்படுமா என்று அவர் கேட்டார்.
இதற்கு பதிலளித்த மேயர், ஒரே வீட்டுக்கு பல வரிகளை செலுத்துவதால் உரிமையாளர்கள் இன்னல்படுகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர்கள், ஒரே சொத்துவரியாக மதிப்பீடு செய்யக் கோரி வருவாய்துறையிடம் மனு அளித்தால், கள ஆய்வு செய்து ஒரே சொத்துவரியாக மதிப்பிடப்படும் என்றார்.