தினமலர் 12.04.2010
ஒளிரும் வழிகாட்டி பலகை அமைக்க நிதி வழங்கல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஒளிரும் வழிகாட்டி பலகை வைப்பதற்கு மாநகராட்சிக்கு 2 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் 2009-2010ம் ஆண்டிற்க சாலைத் தடுப்பு வேலிகள், வழிகாட்டி பலகைகள், ஒளிரும் விளக்குகள் உட்பட சாலை பாதுகாப்பு பணிகளுக்காக பல்வேறு மதிப்பீடுகள் பெறப்பட்டு போக்குவரத்து ஆணையருக்கு கருத்துருக்கள் பரிந்துரைக்கப்பட்டு மாவட்ட கலெக்டரால் அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 11 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.46 சாலை தடுப்பு வேலிகள் மற்றும் ஒளிரும் வழிகாட்டி விளக்குகள் உட்பட பல்வேறு சாலை பாதுகாப்பு பணிகளுக்காக 9 லட்சத்து 19 ஆயிரத்து 550 ரூபாய் போலீஸ் எஸ்.பிக்கு வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி நகர பகுதியில் ஒளிரும் வழிகாட்டி பலகைகள் உட்பட சாலை பாதுகாப்பு பணிகளுக்காக மாநகராட்சி ஆணையருக்கு 2 லட்சத்து 64 ஆயிரத்து 500 வழங்கப்பட்டுள்ளது.அனைத்து பணிகளையும் ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.