தினமலர் 09.04.2010
ஓசூர் தற்காலிக பஸ் ஸ்டாண்டு குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு
ஓசூர்: ஓசூர் நகராட்சி தற்காலிக பஸ் ஸ்டாண்ட்டில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் மலைபோல் குவிந்துள்ளதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஓசூர் புறநகர் சீத்தாராம் நகரில் நகராட்சி தற்காலிக பஸ்ஸ்டாண்ட் செயல்படுகிறது.
பஸ்ஸ்டாண்ட் வளாகம், நான்கு வழிச்சாலையோரங்கள் போன்ற இடங்களில் ஏராளமான ஹோட் டல்கள், டீ கடைகள், பேக்கரி கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகள் உள்ளன. இங்கு வீணாகும் உணவு கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றை கடைக்காரர்கள் திறந்த வெளியில் பஸ்ஸ்டாண்ட் வளாகம் மற்றும் சாலையோரங்களில் கொட்டி வருகின்றனர்.
அவற்றை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அப்புறப்படுத்தி லாரி கள் மூலம் புறநகர் பகுதி கழிவு உரக்கிடங்கில் கொண்டு கொட்ட வேண்டும்.தற்காலிக பஸ்ஸ்டாண்ட் சென்னத் தூர் பஞ்சாயத்து நிர்வாகத்துக்குட்பட்ட சீத்தாராம் நகரில் உள்ளது. பஸ் ஸ்டாண்ட் நகராட்சிக்கு சொந்த மானது என்பதால், அங்கு குவியும் குப்பைகள், கழிவுகளை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்ய வேண்டும்.
பஸ் ஸ்டாண்ட் துவக்கப்பட்டபோது நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அவற்றை தினம் அப்புறப் படுத்தினர். தற்போது, குவியும் குப்பைகளை தினமும் அப்புறப்படுத்தாமல் பல நாட்கள் தேங்கிய பின் அப்புறப்படுத்து கின்றனர்.இதனால்பஸ் ஸ்டாண்ட் பகுதியை சுற்றிலும் சுகாதாரமற்ற நிலையுள்ளது. பாதிக்கப் பட்டுள்ள பயணிகள் ,தற்காலிக பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.