தினத்தந்தி 14.08.2013
ஓரிரு நாளில் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அதிகாரி தகவல்
சென்னை குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து ஓரிரு நாளில் குழாய்
மூலம் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரி
ஒருவர் தெரிவித்தார்.
வீராணம் ஏரி
கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது.
காவிரியில் வினாடிக்கு 1.20 லட்சம் கனஅடி திறந்துவிடப்பட்டது. இதையடுத்து
மேட்டூர் அணை வேகமாக நிரம்பியது. உபரி நீர் முழுவதும் திறந்துவிடப்பட்டது.
இந்த தண்ணீர் கல்லணை வழியாக கடந்த 7–ந் தேதி கீழணை வந்து சேர்ந்தது. கீழணை
நிரம்பியதால் அங்கிருந்து உபரி நீர் கொள்ளிடம் ஆற்றிலும், வடவாறு வழியாக
வீராணம் ஏரிக்கும் திறந்துவிடப்பட்டது.வீராணம் ஏரி, கடலூர் மாவட்டம்
சேத்தியாதோப்பு அருகில் உள்ளது. சென்னையில் இருந்து 235 கிலோ மீட்டர்
தூரத்தில் இந்த ஏரி அமைந்திருக்கிறது. இங்கிருந்து சென்னை குடிநீர்
தேவைக்காக குழாய் மூலம் தண்ணீர் அனுப்பப்படுகிறது. வீராணம் ஏரி வறண்டதால்,
கடந்த ஜனவரி மாதம் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.
நீர்மட்டம் 43.80 அடி
இப்போது கொள்ளிடத்தில் திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் கடந்த 7 நாட்களாக
வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக
உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி வீராணம் ஏரி நீர்மட்டம் 43.80 அடி.
இந்த ஏரியில் 47.50 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். ஏரியின் மொத்த
கொள்ளளவு 1465 மில்லியன் கனஅடி. தற்போது 570 மில்லியன் கனஅடி நீர் இருப்பு
உள்ளது.,வினாடிக்கு 2290 கனஅடி வந்து கொண்டிருந்தது. இதுபோல தொடர்ந்து
தண்ணீர் வந்து கொண்டிருந்தால் ஒருவாரத்திற்குள் ஏரி நிரம்பிவிடும்.
வழக்கமாக இந்த ஏரியில் இருந்து பாசனத்திற்காக ஆவணி மாதம் தண்ணீர்
திறக்கப்படும்.
சென்னைக்கு ஓரிரு நாளில் தண்ணீர் திறப்பு
தேவைக்காக தண்ணீர் அனுப்பலாம். இப்போது 43 அடிக்கு மேல் தண்ணீர்
இருக்கிறது. இருந்தாலும், சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் குழாய்களில்
பராமரிப்பு பணி நடந்து கொண்டிருப்பதால் உடனடியாக தண்ணீர்
அனுப்பப்படவில்லை.‘‘ஓரிரு நாளில் பராமரிப்பு பணி முடிவடைந்ததும், வீராணம்
ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படும்’’ என்று சென்னை
குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறினார்.