தினமலர் 24.05.2013
கடும் குடிநீர் தட்டுப்பாடு வாகனம் மூலம் குடிநீர் வழங்கும் டவுன் பஞ்.,
நங்கவள்ளி: வனவாசி டவுன் பஞ்சாயத்தில், வாகனங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
நங்ககவள்ளி ஒன்றியம், வனவாசி டவுன் பஞ்சாயத்தில், 12 வார்டுகள் உள்ளன. வறட்சிக்கு முன்பு, பொதுமக்களுக்கு, போதிய காவிரிக் குடிநீர் கிடைத்தது. தற்போது, கடும் வறட்சியால், ஒருநாள் விட்டு ஒருநாள், காவிரிக் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. எனினும், பொதுமக்களுக்கு, போதிய குடிநீர் கிடைப்பதில்லை.
ஆழ்துளை கிணறு மூலம் கிடைத்த தண்ணீரும், வறட்சி காரணமாக கிடைக்காததால், பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில், வாகனங்கள் மூலம், குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.