தினமணி 20.05.2010
கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்
தருமபுரி, மே 19: தருமபுரியில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் மே 31-ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பெ. அமுதா எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947 விதி 15 மற்றும் தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் 1958 விதி 42 பி ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்.
ஆங்கிலம் மற்றும் இதர மொழிகளில் பெயர் இருந்தாலும் அவற்றுக்கு மேலாக தமிழில் பெயர் இருக்க வேண்டும். தொழிலாளர் நலத் துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட அலுவலர்கள் இதுகுறித்து திடீர் ஆய்வு செய்வர்.