கட்டட இடிபாடுகளில் இருந்துகட்டுமானப் பொருள்கள் தயாரிக்க திட்டம்
சாலையோரம் கொட்டப்படும் கட்டட இடிபாடுகளில் இருந்து கட்டுமானப் பொருள்கள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை நடந்த கோவை மாமன்றத்தின் அவசரக் கூட்டத்தில், சாலையோரம் கொட்டப்படும் கட்டட இடிபாடுகளில் இருந்து கட்டுமானப் பொருள்கள் தயாரிக்கும் செயல்திட்டத்தைக் கேட்டுப் பெற ஏலம் கோர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ரயில்வே மேம்பாலங்கள்: கோவை பகுதியில் ரயில்வே கிராசிங்குகள் இருக்கும் 8 இடங்களில் மேம்பாலங்கள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குச் சொந்தமான சாலைகளை மேம்பாலம் அமைக்கும் பணிக்காக நெடுஞ்சாலைத் துறைக்கு ஒப்படைக்க வேண்டும். ஒப்படைக்காவிட்டால் மேம்பாலம் கட்டும் பணிக்கான திட்டச் செலவில் 50 சதவீதத்தை மாநகராட்சி ஏற்க வேண்டும். இதனால் மாநகராட்சி சாலைகளில் பணி மேற்கொள்ள நிரந்தரமாக நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைப்பது தொடர்பான தீர்மானத்துக்கு மாமன்றம் அனுமதியளித்துள்ளது.
இதேபோல, வ.உ.சி. பார்க் சாலை, நூறடி சாலை, சின்னச்சாமி நாயுடு சாலை ஆகிய இடங்களிலும் மேம்பாலம் கட்டுவதற்காக மாநகராட்சிக்குச் சொந்தமான சாலைகளை நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.