தின மணி 20.02.2013
கணபதிபுரம் பேரூராட்சியில் குடிநீர்த் தொட்டிப் பணி தொடக்கம்
கணபதிபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட ஆறுதெங்கன்விளைப் பகுதியில் புதிய குடிநீர்த் திட்டப் பணி தொடக்கவிழா நடைபெற்றது.
குடிநீர்த் தொட்டி அமைக்க வேண்டும் என, இப் பகுதி மக்கள் நாஞ்சில் முருகேசன் எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று, 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர்த் தொட்டி கட்ட அவர் தனது தொகுதி மேம்பாடு நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.
இதையடுத்து நடைபெற்ற விழாவில் அவர் பங்கேற்று தொட்டி கட்டுவதற்கான பணியைத் தொடக்கிவைத்தார்.
கணபதிபுரம் பேரூராட்சித் தலைவர் தாணுலிங்கம், துணைத் தலைவர் கிருஷ்ணகுமார், உறுப்பினர்கள் கலைச்செல்வி, இளங்கோ, அதிமுக ஒன்றியச் செயலர் ராமகிருஷ்ணன், பேரூர் செயலர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.