தினமலர் 03.08.2010
கமிஷனர் பழனிசாமிக்கு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்துசேலம்
: சேலம் மாநகராட்சி கமிஷனர் பழனிசாமிக்கு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.சேலம் டாஸ்மாக் மண்டல மேலாளராக பணியாற்றி வந்தவர் பழனிசாமி. கால்நடை மருத்துவ படிப்பு படித்துள்ளார். அவர் 2008 ஏப்ரல் 3ம் தேதி சேலம் மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்றார். இரண்டு ஆண்டு பொறுப்பு வகித்த கமிஷனர் பழனிசாமிக்கு தற்போது ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் ஏற்கனவே கமிஷனராக பணியாற்றி வந்த ஜெயராமன், தற்போது நெல்லை மாவட்ட கலெக்டராக உள்ளார். இரண்டாவதாக பழனிசாமி ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.