தினமலர் 12.10.2010
கம்பம் ஓட்டல்களில்சுகாதார பிரிவினர் சோதனை
கம்பம்:கம்பத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் நகராட்சியின் சுகாதார பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி சுகாதாரமற்ற வகையில் விற்பனை செய்யப்பட்ட மீன் பொறியல்களை பறிமுதல் செய்தனர். கம்பம் மெயின் ரோட்டில், பாலம் அருகில் உள்ள அசைவ ஓட்டலில் விற்கப்படும் மீன் பொறியல்கள் சுகாதாரமற்ற வகையில் இருப்பதாக புகார் வந்தது. இதையடுத்து நகராட்சி சுகாதார அலுவலர் ஜெயராமன் தலைமையில் அதிகாரிகள் குழு ஓட்டலில் ஆய்வு நடத்தியது. அங்கிருந்த பத்து கிலோ மீன் பொறியல் மற்றும் மீன் குழம்பு ஆகியவற்றை பறிமுதல் செய்தது. பறிமுதல் செய்த மீன் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகள் கூறுகையில் “குறிப்பிட்ட ஓட்டலில் விற்கப்படும் மீன் பற்றி புகார் வந்தது. சோதனை நடத்தி மீன் பொறியல்களை பறிமுதல் செய்துள்ளோம். பறிமுதல் செய்யப்பட்ட மீன் பொறியலின் சாம்பிள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். முடிவு வந்தபின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.