தினமலர் 03.05.2010
கம்பம் பாதாள சாக்கடை திட்டம் தாமதம் ஆகும்
கம்பம் : கம்பத்தில் பாதாள சாக்கடை பணிகள் விரைவில் துவக்கப்படுவதற் கான வாய்ப்புகள் இல்லை.கம்பத்தில் பாதாள சாக்கடை பணிகளை செய்ய 36 கோடி ரூபாய்க்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டன. சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்வதில் குழப் பம் நீடிக்கிறது. இதனால் ஆய்வுப்பணிகள் முடிந்து இரண்டரை ஆண்டுகளை கடந்தும் குழப்பம் தீரவில்லை. தற் போதய நிலையில் கம்பம் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மறுமதிப்பீடு செய்து, அரசிடம் அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது. மறுமதிப்பீடு 50 கோடி ரூபாயினை தாண்டும் வாய்ப்பு உள்ளதால் அரசிடம் அனுமதி பெறுவதிலும் சிரமம் ஏற்படும். எனவே கம்பத்தில் பாதாள சாக்கடை பணிகள் விரைவில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.