தினமணி 24.02.2010
கலப்படம்: சுகாதாரத் துறையினர் அதிரடி சோதனை
காஞ்சிபுரம், பிப். 23: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உணவில் கலப்பட பொருள்கள் இருக்கிறதா என்பது குறித்து சுகாதாரத் துறையினர் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.
÷சுகாதாரத்துறை துணை இயக்குநர் ராஜசேகரன் தலைமையில் காஞ்சிபுரம் நகராட்சிப் பகுதிகளில் அவர்கள் திடீர் ஆய்வு செய்தனர். ÷
இரு தேயிலை பொருள்களின் கிடங்குகள், 8 மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள், மற்றும் 15 தேநீர் கடைகள் ஆகிய இடங்களில் இவர்கள் ஆய்வு நடத்தினர்.
÷தேயிலை தயாரிப்பு, தொழிற்சாலை விவரம், தயார் செய்யப்பட்ட நாள் மற்றும் காலாவதியாகும் நாள் முதலியவை முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்றும் ஆய்வில் கண்காணிக்கப்பட்டன.
÷காலாவதியான பொருள்கள் கைப்பற்றப்பட்டு நகர் நல அலுவலர் பரணிகுமாரின் முன்னாள் தீயில் அழிக்கப்பட்டன.
÷சந்தேகப்படும்படியாக இருப்புப் பொருள்கள் மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்காக தஞ்சாவூர் உணவு பகுப்பாய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. இந்த திடீர் ஆய்வில் உணவு ஆய்வாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.