தினமணி 19.08.2010
கல்வி உபகரணங்கள் அளிப்பு
திருச்சி, ஆக. 18: திருச்சி கீழ தேவதானம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்குக் குறிப்பேடுகள், பேனா, பென்சில்கள், சீருடைகள் ஆகியவை அண்மையில் வழங்கப்பட்டன.
பள்ளித் தலைமையாசிரியர் து. மகேஸ்வரி தலைமை வகித்தார். புனித வளனார் கல்லூரி தலைமைச் செயலர் அருள்தந்தை ஆல்பர்ட் முத்துமாலை அடிகள், டிஸ்úஸô அறக்கட்டளை நிறுவனர் ஜேம்ஸ், செயலர் லீனா ஜெனிபர், சமூக நல மேம்பாட்டு அமைப்புத் தலைவர் தங்கவேல், பெற்றோர்– ஆசிரியர் கழகச் செயலர் முருகேசன், உதவி ஆசிரியை ந. தீபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.