தினகரன் 04.08.2010
களியக்காவிளை பேரூராட்சியை ஊராட்சியாக மாற்ற வேண்டும் கூட்டத்தில் தீர்மானம்
களியக்காவிளை, ஆக. 4: களியக்காவிளை பேரூராட்சி சாதாரண கூட்டம் தலைவர் இந்திரா தலைமையில் நடந்தது. உறுப்பினர்கள் விஜயானந்தராம், விஜயேந்திரன், கமால், ராஜூ குமார் உட்பட பலர் கலந்து கொண் டனர்.
கூட்டத்தில் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் உள்ள முக்கியமான சாலைகளில் சோடியம் விளக்குகள் அமைப்பது, குடிநீர் திட்டங்களை செயல்படுத்துவது, சாலைகள் மேம் பாடு செய்வது உட்பட பல் வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் 2006&07 தணிக்கைப்படி பேரூராட்சிக்கு வரவேண்டிய வரவினங் களை சட்ட நடவடிக்கை மேற்கொண்டு ஈடு செய்வது, இந்திரா மற்றும் கலைஞர் குடியிருப்பு திட்ட இலவச வீடுகளும், மகாத்மா காந்தி ஊரக 100 நாள் வேலை உத்தரவாத சட்ட வேலையும் பேரூராட்சி பகுதி ஏழைகளுக்கும் கிடைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் களியக்காவிளை பேரூராட்சியை கிராம ஊராட்சியாக மாற்றம் செய்ய அரசை கேட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.