தினகரன் 05.10.2010
கள்ளக்குறிச்சி நகராட்சியில் கால்வாய் அடைப்பை சீரமைக்க கோரிக்கை
கள்ளக்குறிச்சி
, அக். 5: கள்ளக்குறிச்சி நகராட்சியில் ஒரு லட்சத்துக்கும் அதிக மான மக்கள் வசிக்கின்றனர். 3ம் நிலை நகராட்சியாக இருந்த நகராட்சி தற்போது முதல் நிலை தரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. 21 வார்டுகள் உள்ள நகராட்சியில் புதிய நகர்கள் உருவாக்கப்பட்டு உள்ளது.கள்ளக்குறிச்சி பகுதியில் பிரதான கழிவுநீர் கால்வாயாக கச்சேரி சாலை
, காந்தி ரோடு, சேலம் மெயின் ரோடு கால்வாய் உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள டீக் கடை, மளிகை கடை, வர்த் தக நிறுவனங்கள், குப்பை கள், பிளாஸ்டிக் கழிவு கள் கொட்டப்படுகிறது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கொசுக்கள் உற்பத்தியாகிறது. மழை பெய்தால் கால்வாய் அடைப்பு கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கடந்த வாரங்களுக்கு முன் நள்ளிரவில் பெய்த பலத்த மழையால் கச்சேரி சாலை, சேலம் மெயின் ரோடு கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மழைநீருடன், கழிவுநீர் கலந்து சாலையில் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.எனவே கள்ளக்குறிச்சி முக்கிய நகரில் உள்ள கழிவுநீர் கால்வாய் அடைப்புகளை நகராட்சி நிர்வாகம் வருகிற பருவ மழைக்காலம் துவங்கும் முன் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.