தினமணி 03.02.2010
கழிப்பறைத் தொட்டியின் காற்றுப் போக்கிகளில் கொசுவலை கட்ட திட்டம்
விழுப்புரம், பிப்.2: விழுப்புரம் நகரில் முதல்கட்டமாக 10 ஆயிரம் வீடுகளில் உள்ள கழிப்பறைத் தொட்டிகளின் (செப்டிக் டேங்க்) காற்றுப் போக்கிகளில் கொசுவலை கட்டும் பணி வரும் திங்கள்கிழமை முதல் தொடங்கப்படும் என்று நகர்மன்றத் தலைவர் ஆர். ஜனகராஜ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
÷இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியது: அதிகமான கொசுக்கள் இந்த செப்டிக்டேங்க்களில்தான் உற்பத்தியாகிறது என்பதால் அதை கட்டுப்படுத்த, அந்த டேங்குகளில் வைக்கப்பட்டுள்ள காற்றுப் போக்கிகளின் மேல்பகுதியில் கொசுவலை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. ÷
இதற்காக 20 ஆயிரம் வீடுகளில் கட்ட திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக 10 ஆயிரம் வீடுகளில் செயல்படுத்தப்படும்.
÷அதே நேரத்தில் விழுப்புரம் நகரை 6 பிரிவாகப் பிரித்து ஒவ்வொரு நாளும் ஒரு பிரிவில் ஒட்டுமொத்தமாக கொசு மருந்து அடிக்கும் பணியும் தொடங்க உள்ளது. ÷
நகரில் மக்களுக்கு பெரும் தொல்லையாக உள்ள நாய்களை பிடித்து, மக்கள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் விடப்படும். பன்றிகளை சுடுவது குறித்து ஆட்சியரிடம் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். ÷பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், மாடுகளை தங்கள் வீடுகளிலேயே கட்டி வைத்து பராமரிக்க வேண்டும் என்றும், மீறி சாலையில் நடமாடும் மாடுகளை பிடித்து ஓரிடத்தில் அடைக்கப்பட்டு, உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தண்டோரா போடப்படும் என்று தெரிவித்தார்.
÷நகரில் விநியோகிக்கப்படவுள்ள கொசு வலையை நகர்மன்றத் தலைவர் ஆர். ஜனகராஜ், ஆணையர் சிவகுமாரிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் மேலாளர் லட்சுமிநாராயணன், பொதுப்பணி மேற்பார்வையாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், நகர்மன்ற உறுப்பினர்கள் ரகுபதி, சுரேஷ்பாபு, வினோத், கம்பன், சரவணன், கலைவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.