தினமணி 26.03.2013
கழிவுநீர் கால்வாய் பணி:நகர்மன்றத் தலைவர் ஆய்வு
திண்டிவனம் நகராட்சி சார்பில், நேருவீதியில் உள்ள கிருஷ்ணபிள்ளை வீதியில் துவங்கி மேம்பாலம் வரை கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளை நகர்மன்ற தலைவர் கே.வி.என்.வெங்கடேசன் அண்மையில் நேரில் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, ஆணையர் அண்ணாதுரை, நகர்மன்ற உறுப்பினர் சுதாகர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.
கால்வாய் அமைக்கும் பணியால் நேருவீதியில் போக்குவரத்து பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு இப்பணியை விரைவில் முடிக்கும்படி அதிகாரிகளிடம் நகர்மன்ற தலைவர் தெரிவித்தார்.