தினகரன் 17.06.2010
கவுண்டம்பாளையம் நகராட்சி கூட்ட அரங்கை ஸ்டாலின் திறந்து வைத்தார்
பெ.நா.பாளையம், ஜூன் 17: கோவை கவுண்டம்பாளையம் நகராட்சி மற்றும் வடவள்ளி பேரூராட்சி குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.30 கோடியே 18 லட்சத்தில் பவானி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட் டது. துணை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று குடிநீர் வினி யோக திட்டத்தை துவக்கி வைத்தார். பின்னர் மின் மோட்டார் அறையை பார்வையிட்டார். நகராட்சி அலுவலக மேல் தளத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூட்ட அறை, தலைவர் அறையை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் தலைவர் அறைக்குள் சென்று சிறிது நேரம் தலை வர் இருக்கையில் அமர்ந்திருந்தார்.
குடிநீர் திட்ட பணிகளை சிறப்பாக செய்ததாக நக ராட்சி தலைவர் சுந்தரம், செயல் அலுவலர் தன சேக ரன், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், நகராட்சி கவுன்சிலர்களை பாராட்டினார்.
பின்னர் நகராட்சி அலுவலகத்தின் மேற்புறம் தமிழ் வாழ்க என்று நியான் குழல் விளக்கில் வைக்கப்பட்டுள்ள போர்டை பார்வையிட்டார். அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியில் கவுண்டம் பாளையம் நகராட்சி தலை வர் சுந்தரம், செயல் அலுவ லர் தன சேகரன், சண்முகம், ராஜ கோபால், நாகராஜ், ராஜேஸ்வரி விஜயகுமார், தமிழ்செல்வன் மற்றும் பலர் பங்கேற்றனர்.