தினகரன் 28.06.2010
கவுன்சிலர்கள் அதிருப்தி மாநகராட்சி பூங்காவில் வாகன பார்க்கிங் வசதி
பெங்களூர், மே 28:பெங்களூர் மாநகராட்சி பூங்காக்களில் வாகனங்களை நிறுத்துவதற்காக பார்க்கிங் பகுதி கட்ட அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். இத்திட்டம் கவுன்சிலர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் கூறியதாவது: பெங்களூர் மாநகராட்சிட்பட்ட அக்கிதிம்மனஹள்ளி, லாங்போர்ட், தொலைபேசி நிலைய காலனி , மல்லேஸ்வரம் கோவில் மற்றும் கண்டீர்வா ஸ்டேடியம் உள்ளிட்ட பல்வேறு பூங்காக்களில் வாகனப் பார்க்குகள் கட்ட மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. இதைநிர்வாகம் மறுபரிசீலனை செய்யமுன்வர வேண்டும். அந்தந்த பகுதிகளிலுள்ள முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் தங்களுடைய உடற்பயிற்சி மற்றும் நடைபாதைகளை பூங்காக்களை பயன்படுத்தி வருவது காலகாலமாக நடைபெற்று வருகிறது. இதனை அழிக்கும் முயற்சியிம் மாநகராட்சி நிர்வாகம் முயற்சி செய்யக்கூடாது.
இந்த பூங்காக்களில் வாகனப்பார்க்ககிங் வசதி ஏற்படுத்த பி.டி.ஏ. மே.28ம்தேதி அனுமதி வழங்கியுள்ளது. இதனை நிச்சயமாக அனுமதிக்க மாட்டோம். மக்களின் நன்மையை முன்வைத்து செயல்பட வேண்டும். இதுகுறித்த கோரிக்கை மனுக்களை மாநகராட்சி நிர்வாக தலைமை இஞ்சினியரிடம் அளித்துள்ளோம். முதல்வர் எடீயூரப்பா இதில் தலையிட்டு மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்றனர்.