தினகரன் 02.09.2010
காமன்வெல்த் கட்டுமானப் பணியில் தாமதம் நம்பகத்தன்மையை மாநகராட்சி இழக்கும் பணிகள் குழு தலைவர் எச்சரிக்கை
புதுடெல்லி
, செப். 2: “காமன்வெல்த் தொடர்பான கட்டுமானப் பணிகளை திட்டமிட்ட காலத்துக்குள் முடிக்க முடியாமல் மாநகராட்சி தோல்வி அடைந்திருப்பது, அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இது மாநகராட்சியின் நம்பகத்தன்மையை இழக்கச் செய்துவிடும்” என்று மாநகராட்சி பணிகள் குழு தலைவர் ஜகதீஷ் மாம்கெயின் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
:காமன்வெல்த் கட்டுமானப் பணிகளை முடிப்பது தொடர்பாக மாநகராட்சி இதுவரை
6 முறை கெடு தேதியை நிர்ணயித்து செயல்பட்டும் பணிகள் முடியவில்லை. இதன் மூலம் மாநகராட்சி தனது நம்பகத்தன்மையை இழந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.கரோல் பாக்
, பஹர்கஞ்ச், டெல்லி பல்கலைக்கழக பகுதி ஆகியவற்றில் நடைபெறும் பணிகள் மிக மெதுவாக நடைபெறுகின்றன. டெல்லி பல்கலைக்கழக பகுதி, சத்திரசால் மைதானப்பகுதி, ரக்பி மைதானப் பகுதி ஆகியவற்றில் 12 சாலைகள் மேம்படுத்தப்படுகிறது. இதில் 4 சாலைகளில் பணிகள் முடிந்துவிட் டது. மற்றவை வரும் 11ம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நகர்ப்பகுதியில் மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டுள்ள
10 பணிகளில் ஒன்றுதான் முடிந்துள்ளது. 6 பணிகள் 7ம் தேதிக்குள் முடிக்கப்படும் என்றும், டிடியூ மார்க், மின்டோ சாலை ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் பணிகள் 15ம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.இம்முறையாவது பணிகளை திட்டமிட்டபடி முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.