தினமணி 21.04.2013
காயல்பட்டினம் நகராட்சியில் நவீனகுப்பைத் தொட்டிகள்
தமிழக அரசின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், காயல்பட்டினம் நகராட்சி வார்டுகளில் குப்பை சேகரிக்கும் நவீனத் தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
கோவை ஷார்ப் சிஸ்டம் நிறுவனத்துக்கு நகர்மன்றம் சார்பில் ஒப்புதல் வழங்கப்பட்டு, குப்பை சேகரிக்கும் நவீன தொட்டிகள் பெறப்பட்டு வருகின்றன. நகராட்சி சார்பில் உச்சினிமாகாளியம்மன் கோவில் தெரு, காட்டு தைக்கா தெரு உள்ளிட்ட பகுதிகளில் குப்பை சேகரிக்கும் நவீன தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. உச்சினிமாகாளியம்மன் கோவில் தெருவில் குப்பைத் தொட்டி வைக்கப்படும்போது, அந்த வார்டு உறுப்பினர் கே.ஜமால், அதிமுக 15-வது வார்டு செயலர் காசிலிங்கம், அப்பகுதியைச் சேர்ந்த கணேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.