தினமலர் 25.05.2010
காலரா பரவாமல் தடுக்க நகராட்சி முன்னெச்சரிக்கை
தேவகோட்டை: தேவகோட்டையில், குடிநீர் மூலம் காலரா பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக, நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் தெரிவித்தார். அவர் கூறுகையில்,””இங்கு உள்ள ஏழு மேல்நிலை குடிநீர் தொட்டிகளில், “குளோரினேஷன்‘ செய்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வுக்காக குடிநீர் எடுத்து அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்கள், காய்ச்சி வடிகட்டிய குடிநீரை தான் குடிக்கவேண்டும். ஊழியர்கள் வீடு, தெருக்களில் உள்ள குடிநீர் குழாய்களில் இருந்து வெளியேறும் தண்ணீர் தேங்காமல் இருக்க, பணிகளைசெய்கின்றனர்,” என்றார்.