தினமலர் 18.05.2010
காலாவதியானபொருட்கள் அழிப்பு
கோபிசெட்டிபாளையம்: கோபி நகராட்சி அலுவலர் ஆறுமுகம் தலைமையில் துப்புரவு ஆய்வாளர்கள் சையத் காதர், செந்தில்குமார் உள்பட துப்புரவு தொழிலாளர்கள் நேற்று காலை 10.30 மணிக்கு மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் காலாவதியான பொருட்கள் உள்ளதா ? என சோதனையிட்டனர். அப்போது காலாவதியான மிட்டாய், குளிர்பானங்கள், மிளகாய் தூள் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றி அழித்தனர். இதன் மதிப்பு 25 ஆயிரம் ரூபாய். ‘கோபி நகராட்சி பகுதியில் அடிக்கடி சோதனை நடத்தப்பட்டு, காலாவதியான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்படும்‘ என நகராட்சி சுகாதார அலுவலர் ஆறுமுகம் தெரிவித்தார்.