தினமலர் 01.08.2012
காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்
தேனி:தேனியில் உணவு கட்டுபாட்டு அலுவலர்கள் நடத்திய சோதனையில், காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்ட உணவு கட்டுப்பாட்டு அலுவலர் ராஜா தலைமையில், அலுவலர்கள் அறிவுசெல்வம், பாலமுருகன், ஜனகன், சரவணன் ஆகியோர் மூன்று மொத்த விற்பனை கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு சிறுவர்களுக்கு கேடு விளைவிக்கும் தின்பண்டங்கள், காலாவதியான மிட்டாய் போன்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்து நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இவற்றின் மதிப்பு ரூ.30 ஆயிரம்.
கம்பம்: கம்பம் வாரச் சந்தையில் இந்த குழுவினர் சோதனை நடத்தினர். இதில் குழந்தைகளுக்கு கேடு விளைவிக்கும் உணவு பொருட்கள், “சாக்லெட்’, “கிரீம்’ மற்றும் காலாவதியான ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான உணவு பொருட்களை பறிமுதல் செய்து நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.