தினமலர் 02.03.2010
காலி மனைகள் கணக்கெடுப்பு
மதுரை : மதுரை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள காலி மனைகளுக்கு “பொட்டல் வரி‘ செலுத்தப்பட வேண்டும். பல ஆண்டுகளாக புதிய கட்டடங்களுக்கே, வரி விதிக்கப்படாத நிலையில், காலி மனைகளுக்கு வரி வசூலிக்கப்படவில்லை.எந்தெந்த வார்டில் எத்தனை காலி மனைகள் உள்ளன என்ற கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை. இந்த வரியை ஒழுங்காக வசூல் செய்திருந்தாலே, நிதி நிலை வலுவாக இருந்திருக்கும். தற்போது வரி வசூலில் மாநகராட்சி கெடுபிடி காட்டுவதால், காலி மனைகளை கணக்கெடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தந்த வார்டு கவுன்சிலர் மற்றும் வரி தண்டலர்களிடம் இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மார்ச் 31 உடன் கணக்கெடுப்பு முடிந்து, அதன் பிறகு, பொட்டல் வரி விதிப்பில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட உள்ளது.