மாலை மலர் 05.07.2013

ஆணையில் இருந்து ஆண்டுதோறும் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
உப்பலமதகு என்ற இடத்தில் கிருஷ்ணா கால்வாயில் உடைப்பு ஏற்பட்டிருந்ததால்
கடந்த 2 மாதமாக கிருஷ்ணா தண்ணீர் நிறுத்தப்பட்டது.
இப்போது உடைப்பு ஏற்பட்ட இடத்தில் புதிதாக கண்மாய் கட்டப்பட்டுள்ளது. இந்த
பணி முழுமையாக முடிவடைந்ததால் கடந்த 1-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து
கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
வினாடிக்கு 500 கன அடி வீதம் கால்வாய் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லையான ஜீரோ பாயிண்ட் வரை கிருஷ்ணா கால்வாயின் நீளம் மொத்தம் 153 கிலோ மீட்டர் ஆகும்.
இதில் 121 கி.மீட்டர் தூரத்தை கடந்து, கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
உடைப்பு ஏற்பட்டு சரிசெய்யப்பட்டுள்ள பகுதியை உப்பலமதகு கிருஷ்ணா தண்ணீர்
இன்று காலை கடந்தது.
எனவே, இன்னும் 30 கி.மீட்டர் தூரம் கடந்தால் தமிழக எல்லையான ஜீரோ
பாயிண்டுக்கு தண்ணீர் வந்து சேரும். அனேகமாக நாளை காலை வரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
ஜீரோ பாயிண்ட்டில் இருந்து பூண்டி ஏரிக்கு 25 கிலோ மீட்டர் தூரம்தான்
உள்ளது. தண்ணீர் வரும் வேகத்தை கணக்கிட்டால் 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)
தான் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து சேரும் என தெரிகிறது.
கிருஷ்ணா கால்வாய் ஆங்காங்கே கடுமையாக சேதமடைந்து காணப்படுகிறது. பல
இடங்களில் சிமெண்ட் கரைகள் சரிந்து கால்வாய்க்குள் கிடப்பதால் தண்ணீரின்
வேகம் தடைபடுகிறது.
மேலும் இருபுறமும் செடி, மரங்கள் முளைத்துள்ளதால் கரைகள் வலுவிழந்து
உள்ளது. இதனால் தண்ணீரின் வேகம் குறைந்து ஆமை வேகத்தில் கால்வாயில் தண்ணீர்
வந்து கொண்டிருக்கிறது.