காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றில் குவிந்துள்ள கழிவுகளை அகற்றும் பணி தொடக்கம் அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் நடவடிக்கை
காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற் றில் மலை போல் குவிந் துள்ள கழிவுகளை அகற்றி ஆற்றை சுத்தப் படுத்த அமைச்சர் கே.பி.முனுசாமி அறி விறுத்தியதன் பேரில் பேரூராட்சி சார்பில் கழிவுகளை அகற்றும் பணி தொடங்கியது.
மலைபோல் குவிந்துள்ள கழிவுகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் ஓடும் தென்பெண்ணை ஆறு காவேரிப்பட்டணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும், பாச னத்திற்கும் பயன்பட்டுவரு கிறது. இந்த ஆற்றினால் காவேரிப்பட்டணத்தில் சில இடங்களில் முப்போகம் விளைகிறது. ஆனால் இந்த ஆற்றின் நிலையோ வேதனை யளிக்கும் வகையில் உள்ளது.
காவேரிப்பட்டணம் பஸ் நிலையம் அருகே உள்ள தென் பெண்ணை ஆற்றினை நிலை சாக்கடை போல் உள்ளது. இங்கு பிளாஸ்டிக் கழிவுகள், இறைச்சிக்கழிவுகள் மற்றும் நகரில் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படும் கழிவு பொருட்கள் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றின் பாதி பகுதி யில் கழிவுகள் மலைபோல் குவிந்து துர்நாற்றம் வீசு கிறது. இந்த கழிவுகளை அகற்றி தென்பெண்ணை ஆற்றை சுத்தப்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட நாட் களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
அமைச்சர் அறிவுறுத்தல்
இது குறித்து தமிழக உள் ளாட்சி மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி யிடமும் கோரிக்கை வைத் தனர். மேலும் அமைச்சரும் தென்பெண்ணை ஆற்றை பார்வையிட்டு கழிவுகளை உடனடியாக அகற்ற அறிவு றுத்தினார். இதைதொடர்ந்து காவேரிப்பட்டணம் பேரூ ராட்சி சார்பில் தலைவர் வாசு தேவன், செயல் அலுவலர் கணேஷ் ஆகியோர் தென் பெண்ணை ஆற்றில் உள்ள கழிவுகளை அகற்ற நட வடிக்கை எடுத்தனர். அதன் படி பொக்லைன் எந்திரம் கொண்டு கழிவுகளை அகற் றும் பணி தொடங்கியது.